அவசரகாலநிலை பிரகடனம் : பாராளுமன்ற விசேட அமர்வு : அரச உயர்மட்டத்தில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

அவசரகாலநிலை பிரகடனம் : பாராளுமன்ற விசேட அமர்வு : அரச உயர்மட்டத்தில் ஆராய்வு

நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து பாராளுமன்றத்தின் விசேட அமர்வைக் கூட்டுவது தொடர்பில் அரச உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் அமைச்சரவையும் கூடி இதுபற்றி ஆராய்ந்து வருவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன.

நாட்டின் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகப் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதனடிப்படையில் கடந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதேபோன்று கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் விசேட அமர்வைக் கூட்டுவதாக இருந்தால், அதற்கு அவசரகால நிலையொன்று நாட்டில் இருக்க வேண்டும். என்று குறிப்பிட்ட அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன, நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினால், அன்றைய தினத்திலிருந்து பத்து நாட்களுக்குள் பாராளுன்றத்தைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இதுபற்றித் தீர்மானிப்பதற்காக அரசின் உயர்மட்டத்தில் ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.எம்.நிலாம்
தினகரன் வாரமஞ்சரி

No comments:

Post a Comment