சீன பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

சீன பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும்

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஹர்ஷன ராஜகருண மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸை தடுப்பதற்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுப்பதைப் போன்று சீனப் பிரஜைகளுக்கும் தற்காலிக தடை விதிக்க வேண்டும்.

அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும். மேலும் கொரோனா வைரஸினால் சீனாவில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் சீனப் பிரஜைகள் எவ்வித தடங்களுமின்றி நாட்டிற்கு வந்து செல்கின்றனர். ஆனால் ஏனைய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. இதனால் இலங்கையிலும் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment