உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படாது, போலி செய்திகளை நம்ப வேண்டாம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படாது, போலி செய்திகளை நம்ப வேண்டாம்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார்.

மேலும் உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்த வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியானது என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

திட்டமிட்டவாறு க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளானது ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad