2008 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்ற பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அஹ்டிசாரி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது. நிலைமையை கருத்தில் கொள்ளும்போது அவர் நல்ல நிலையில் காணப்படுகின்றார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பின்லாந்தின் ஜனாதிபதியாக பதவி வகித்த மார்ட்டி அஹ்டிசாரிக்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நீண்ட காலம் பங்களிப்பு செய்தமைக்காக 2008 இல் சமாதானத்திற்கான நோபால் பரிசு வழங்கப்பட்டது.
பின்லாந்தில் இதுவரையில் 700 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment