உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் நிறுத்தும்படி ஐ.நா பொதுச் செயலாளர் கட்டளையிட்டுள்ளார். இது பாராட்டும்படியான விடயமாக இருந்தாலும் அக்கட்டளையை ஆயுத பலமிக்க நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஏற்குமா என்பது சந்தேகம்தான். இந்தியா கூட இதனை ஏற்று காஷ்மீர் மக்களுக்கெதிரான போரை நிறுத்துமா என்பதும் சந்தேகம்தான் என இலங்கை உலமா கட்சி தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஐ.நாவின் அறிவுப்புக்கள் ஏழை நாடுகளையே பதம் பார்க்கும். பெரிய நாடுகள் வீட்டோவை பயன்படுத்தியோ பயன் படுத்தாமலோ தமது ஆதிக்க போரை முன்னெடுப்பதையே காண்கிறோம்.
இன்றைய உலகைப் பார்க்கும் போது அமெரிக்கா போன்ற நாடுகளே மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிரியா என போராட்டங்களை உருவாகியுள்ளன.
இந்த அநியாயங்களை பொறுக்க முடியாமலேயே வானத்திலிருந்து கொரோனா வந்துள்ளது. அதனை இன்று உலகம் முழுவதும் ஒற்றுமைப்பட்டு எதிர்த்து போராட வேண்டிய நிலையில் ஐ.நா செயலாளரின் அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
யுத்தம் இல்லாத பூமி வேண்டும், அதில் கொரோனா செத்து மடிய வேண்டும் எனவும் இலங்கை உலமா கட்சி தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment