இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்லத் தடை - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்லத் தடை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்க, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தீர்மானம் எடுத்துள்ளது.

திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் (SLBFE) தலைவர், முகாமையாளர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஆகியவற்றின் பங்களிப்புடன் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக அவசர கால நிலை இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததைக் கருத்தில் கொண்டு, நிலைமையை கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும் வரை இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுமதிப்பதில்லை என, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு வெளிநாடு செல்வோரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துவதற்கான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் சில நாடுகள் அந்நாடுகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment