வறிய நிலையில் உள்ள மக்களின் கொடுப்பனவுகளை அவர்களின் கரங்களுக்கு கிடைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம் - பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

வறிய நிலையில் உள்ள மக்களின் கொடுப்பனவுகளை அவர்களின் கரங்களுக்கு கிடைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம் - பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் வறிய நிலையில் உள்ள மக்களின் கொடுப்பனவுகளை மக்களின் கரங்களுக்கு கிடைக்கும் வகையில் வியாழக்கிழமை முதல் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.

அந்த வகையில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் முகமாக மாஞ்சோலை மற்றும் ஓட்டமாவடி B/2 கிராம அதிகாரி பிரிவுகளின் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் மக்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரினால் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படுகின்றது.

அத்தோடு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏனைய கிராம அதிகாரி பிரிவில் சமுர்த்தி கொடுப்பனவுகள் பெறும் மக்களுக்கு அடுத்த கட்டமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கும் முதியோர் மற்றும் பொதுசன மாதாந்த நிதி உதவி பெறும் மக்களுகான கொடுப்பனவுகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அதிகாரிகளினால் வியாழக்கிழமை முதல் கரங்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்கி வைக்கப்படுவதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad