கல்குடாப் பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கல்குடாப் பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது முறையாக நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கல்குடாப் பிரதேசத்தில் வியாழக்கிழமை வியாபார நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டு பின்னர் வியாழக்கிழமை பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அத்தோடு பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வருவதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவாக காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்களின் அச்ச நிலைமை இன்னும் குறையாத வண்ணம் காணப்படுகின்றது.

வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வரும் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. மக்களின் பாதுகாப்பு கருதி கோறளைப்பற்று, பிரதேச சபையினால் வாழைச்சேனை பொது மைதானத்திலும், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையினால் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது.
இதன் காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நெரிசலினை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடமைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளதுடன், பேருந்து போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் பல நாட்களுக்கு தொடருமோ என்ற அச்ச நிலைமை மக்கள் மத்தியில் காணப்பட்டு வருகின்றது. மக்களின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதீக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment