திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் - ஜப்பான் பிரதமர் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் - ஜப்பான் பிரதமர்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார்.

வரும் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பானிலும் கரோனா தாக்கம் உள்ளதால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் ஒராண்டுக்கு போட்டியை ஒத்தி வைக்கலாம் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதமர் அபே கூறியதாவது ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை மாதம் நடைபெறும். ஜப்பானில் கொரோனா தொடர்பாக உடனே அவசர நிலை பிறப்பிக்கும் எண்ணமில்லை. கொரோனா தாக்கம் குறைவாகவே உள்ளது.

போட்டிகளை நடத்துவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் இதர அதிகாரிகளுடன் இணைந்தே செயல்படுகிறோம். போட்டிகளுக்கான ஏற்பாடுகள் சீராக நடைபெறுகின்றன. ஜனாதிபதி டிரம்ப்புடனும் இது தொடர்பாக ஆலோசித்தேன் என்றார் அபே.

இதேவேளை, டோக்கியோ ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின்போது கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு பாதுகாப்பான முறையில் நடைபெறத் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எனினும் கிரீஸ் தனது மண்ணில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் குழு சுடரோட்டத்தை ரத்துசெய்தது. அதனையடுத்து டோக்கியோ ஆளுநர் அவ்வாறு உறுதிகூறியுள்ளார்.

ஒலிம்பிக் சுடரோட்டம் இம்மாதம் 26 ஆம் திகதி புக்குஷிமா மாநிலத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad