(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய நிலையத்தின் செயற்பாடுகள் மருத்துவ நிபுணர்கள் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். இராணுவத்தினர் அதற்கான உதவிகளை மாத்திரமே வழங்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
"நாடளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் கொவிட்-19 தடுப்பு நிலையத்தின் செயற்பாடுகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பொருத்தமான பிரதிநிதிகள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவினால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அவர்களால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களைத் தேவையேற்படும் பட்சத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் வழங்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கையாளப்படும் அணுகுமுறைகளை விடவும் வேறுபட்ட அணுகுமுறைகளே ஒரு வைரஸ் தொற்றுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்குத் தேவை." என அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment