முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து போட்டியிட வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து போட்டியிட வேண்டும்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து போட்டியிட வேண்டுமென, முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை புளு இலவன் விளையாட்டுக் கழகத்துக்கு தனது சொந்த நிதியிலிருந்து உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை பீச் ஜெஸ்ட் ஹவுஸில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவதன் ஊடாகக் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்கலாம்” என்றார்.

எதிர்காலத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை சகல பிரதேசங்களுக்கும் சமாந்தரமாக கொண்டு செல்ல முடியுமெனக் கூறிய அவர், இனவாதச் சிந்தனையுள்ள சிலர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் குறைப்பதற்காக முகவர்களை நியமித்து, தம்மைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், கூறினார்.

மேலும், இனவாதக் கட்சிகள், முஸ்லிம்கள் மீது போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர் என்றும் அதனை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென்றார்.

ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad