விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் - அமைச்சர் டக்ளஸ்

பாறுக் ஷிஹான்

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர். கடந்த அவரது ஆட்சிக் காலத்தில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யவில்லை அதனால்தான் முதலமைச்சர் பதவிக்கு கையாலாகாதவர் என தெரிவித்திருந்ததாக கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் கே.என்.  டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தற்சமயம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது அந்த மக்களின் கைகளில் தங்கியுள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சரியானவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும். 

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.  விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad