(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கோரும் ஆசனங்கள் வழங்கப்படாவிட்டால் பொதுத் தேர்தலில் அவ்விருவரும் சுதந்திரக் கட்சி சார்பில் தனித்து போட்டியிடுவார்கள் என்று பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைத்து சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானத்துள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சுதந்திர கட்சி தீர்மானித்தது. எனினும் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சில முரண்பாடுகள் காணப்படுவதால் அவ்விருவரும் தனித்து போட்டிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவ்வாறு தீர்மானித்தால் அவர்கள் தமது தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment