சவூதியில் மற்றொரு இளவரசர் கைதானார் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

சவூதியில் மற்றொரு இளவரசர் கைதானார்

சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபிய மன்னர் சல்மானின் மகனும் முடிக்குரிய இளவரசருமான முஹமது பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தை கவனித்து வருகிறார். 

இந்த நிலையில் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக மன்னர் சல்மானின் இளைய சகோதரர் அஹமது பின் அப்துலாஸீஸ், முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப், அவரது சகோதரர் நவாப் பின் நயெப் ஆகியோர் 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இராணுவ முன்னாள் புலனாய்வுத் தலைவரான இளவரசர் நயெப் பின் அஹமது கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment