"வெகுவிரைவில் பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்படுவார்" - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

"வெகுவிரைவில் பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்படுவார்"

(இராஜதுரை ஹஷான்) 

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முக்கிய தரப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். 

2016 ஆம் ஆண்டு மார்ச மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணைமுறி விநியோகத்தின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பலரதப்பட்ட விசாரணை மற்றும் குழு அறிக்கைகளின் ஊடாக அறிந்துக் கொள்ள முடிந்துள்ளது. 

இந்த வேளையில் நிதியமைச்சராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருநாணாயக்க பதவி வகித்தார். அர்ஜுன அலோசியசுடன் கொண்டிருந்த தொடர்பு, மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் நாட்டு பிரஜை நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் அனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புப்பட்டுள்ளன. 

பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட பலதரப்பட்ட குழுக்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபபடவில்லை. இதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் பிரதான தடையாக செயற்பட்டது. 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கம் ஆட்சியமைத்து 3 மாத காலத்திற்குள் தற்போதே பிணைமுறி விவகாரத்திற்கு முதற்கட்ட சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment