ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதன் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக திறப்பு விழா நேற்று பிட்டகோட்டையில் நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமகி ஜனபல வேகயவுடன் இணைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனநாயக பயணத்தில் சகல மக்கள் பிரதிநிதிகளும் அச்சமின்றி இணைந்து செயற்பட முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியுன் சகல தொகுதி கூட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாரா? எனக் கேட்டால் அனைவரும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்றது.
இதில் பங்கேற்குமாறு நானும் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாக உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினதும் கட்சி ஆதரவாளர்களினதும் எதிர்கால நலனைப் பேண அனைவரும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். எமது கதவு யாருக்கும் மூடப்படவில்லை. நாம் எந்த தரப்பிற்கும் புரோக்கராக செயற்படவும் மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment