கொரோனா நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

கொரோனா நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை

கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரிவிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் விதானகே, அந்த நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லையெனவும் சாடினார். 

தற்கால நிலைமைகள் தொடர்பாக அறிவுறுத்தி ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடபட்டுள்ளதாவது, குறிப்பாக ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக உலக நாடுகளை கொரோனா தொற்று அச்சுறுத்திக் கொண்டிருப்பதாகவும், அது தொடர்பாக ஆளும் கட்சியின் அவதானம் செலுத்துவதில்லை என்றும், அவர்கள் தேர்தலின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கினறர் எனவும் சாடினார். 

சீனா உலக சந்தையில் 2/3 பங்கை வகிக்கின்றதெனவும், சிறிய பொருட்கள் முதல் அதி சொகுசு தர இயந்திரங்கள் வரை சகல பொருளையும் அந்நாடே குறைந்த விலையில் உற்பத்தி செய்ததென தெரிவித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக சீனாவிலிருந்து எந்தவொரு உற்பத்தியும் இலங்கை சந்தைக்கு வரவில்லை என்றார். 

தற்போதும் இந்த நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளதெனவும், அதனால் 50 ஆடை உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டிடும் நிலைமை உருவாகி உள்ளதெனவும் சாடினார்.

No comments:

Post a Comment