தேர்தல் பற்றி இணையத்தளங்களில் பொய் புரளி - மஹிந்த தேசப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

தேர்தல் பற்றி இணையத்தளங்களில் பொய் புரளி - மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாராளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாமென சில இணையத்தளங்களில் வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாதென தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அத்தகவலை நிராகரித்துள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் தான் அறிவுறுத்தப்படவுமில்லை, அப்படியான முடிவை ஆணைக்குழு ஆராயவுமில்லை எனத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், அந்த இணையச் செய்தி புரளியெனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான புரளிகளை பரப்பும் ஊடகங்கள் தொடர்பில் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், கட்டு மீறிப் போகுமிடத்து அந்த இணையங்களை முடக்க நடவடிக்கை எடுக்க நேரிடலாமென அவர் எச்சரித்துள்ளார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment