கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக கிருமி தொற்றகற்றலுக்கு பயன்படுத்தப்படும் 4000 தொற்று நீக்கி தெளிக்கும் இயந்திரங்கள் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மாகாண சுகாதார ஆணையாளர்களுக்கு இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள அதிகார சபை கட்டிடத்தில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்றது.
ஒரு இயந்திரத்தின் பெறுமதி ரூ 15,000/-க்கும் 20,000/- இடையிலாகும். இதன் கொள்ளளவு 16 லீட்டர்களாகும். வைத்தியசாலைகள், பொலிஸ், சிறைச்சாலை, பிரதேச சுகாதார பணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு இயந்திரங்கள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாய அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரணவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment