ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 123 பேர் பலி - மொத்த எண்ணிக்கை 1556 ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 123 பேர் பலி - மொத்த எண்ணிக்கை 1556 ஆக அதிகரிப்பு

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 123 பேர் உயிரிழந்துள்ளதால் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment