பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டவேண்டும் - மட்டு அரச அதிபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 12, 2020

பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டவேண்டும் - மட்டு அரச அதிபர்

எதிர்காலத்தில் தற்போது இருப்பதை விட பெண்கள் இன்னமும் அரசியல்துறைகளிலும் ஈடுபாடு காட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய நிகழ்வு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர் கலாமதி தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் பெண்கள் பலதுறைகளிலும் சாதனை படைத்துள்ளார்கள். 

ஆனாலும், பெண் விகிதாசாரத்துக் கேற்ப அரசியலில் ஈடுபாடுகாட்டவில்லை என்ற குறை இலங்கைப் பெண்கள் சார்பில் உள்ளது. அதனை நிவர்த்திக்கும் வகையில் எதிர்காலத்தில் பெண்கள் அரசியல் துறையிலும் ஈடுபாடுகாட்ட முயற்சிக்க வேண்டும்” என்றார். 

இவ்விழாவினையிட்டு. மாதர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் பெண் எழுச்சி தொடர்பான. கலாசார நிகழ்வுகழும். இடம்பெற்றன. மாவட்டச் செயலாளரின் பொதுப் பணிகளைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad