வெளிநாட்டு விமானங்கள் உள்நுழைய தடை விதித்தது பாக்கிஸ்தான் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

வெளிநாட்டு விமானங்கள் உள்நுழைய தடை விதித்தது பாக்கிஸ்தான்

பாக்கிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600 ஐ கடந்து, மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் உள்நுழைய 14 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, பலியானவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் நட்பு நாடான பாக்கிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்து, மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் அனைத்து வெளிநாட்டு பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் இன்றிரவு 8 மணியில் இருந்து அடுத்த இரு வாரங்கள் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்கும் பரிசோதனைகளுக்கான உபகரணங்களை வாங்குவதற்காகவும் உலக வங்கி அளித்த கடனில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையில் சுமார் 4 கோடி அமெரிக்க டொலர்களை செலவிடுவதற்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

No comments:

Post a Comment