சாட் நாட்டில் போகோ ஹராமினர் நடத்திய தாக்குதலில் 92 இராணுவத்தினர் பலி, 47 பேர் காயம்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

சாட் நாட்டில் போகோ ஹராமினர் நடத்திய தாக்குதலில் 92 இராணுவத்தினர் பலி, 47 பேர் காயம்!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சாட்டில் போகோ ஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 92 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 47 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இட்ரிஸ் டெபி தெரிவித்துள்ளார். 

சாட், நைஜீரியா மற்றும் நைஜர் ஆகிய படையினர் பல ஆண்டுகளாக இஸ்லாமிய பேராளிகளுக்கு எதிராக போராடி வரும் நிலையில் சாட்டின் போமா என்ற கிராமத்திலேயே மேற்படி தாக்குதலானது திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளது. 

சாட்டில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறினார். 

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் காரணமாக கவச வாகனங்கள் உட்பட 24 இராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது கைப்பற்றப்பட்ட இராணுவ ஆயுதங்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் கையகப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad