அச்சத்தால் வீதிக்கு விரட்டப்படும் மருத்துவர்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

அச்சத்தால் வீதிக்கு விரட்டப்படும் மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவர்கள் சிலரை அவர்களால் நோய் பரவும் என்ற அச்சத்தில் அயலவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இந்தியாவின் மருத்துவர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. 

தற்காலிகமாக அறைகளிலும் வீடுகளிலும் தங்கியிருந்தவர்கள் சிலரை வீடுகளின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர் என எய்ம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

புதுடில்லியின் மூன்று மருத்துவர்களும், ஹைதராபாத்தின் 15 மருத்துவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள எய்ம்ஸ் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

மருத்துவர்களின் மனோநிலையில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள எய்ம்ஸ் அவர்கள் தற்போது தங்கள் உடமைகளுடன் நடு வீதியில் நிற்கின்றனர் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. 

மருத்துவர்களிற்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்திய சுகாதாரதுறை அமைச்சர் வேதனை வெளியிட்டுள்ளார். மருத்துவர்களை வெளியேற்றுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad