பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் : ஜனாதிபதி போல்சனரோ - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் : ஜனாதிபதி போல்சனரோ

கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும் உள்ளது.

No comments:

Post a Comment