சண்டிலிப்பாயில் 214 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

சண்டிலிப்பாயில் 214 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவியால் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகம் ஏற்பட்டவர்களை கண்காணித்து சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபரின் மனைவி சமுர்த்தி உத்தியோகஸ்தராவார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார்.

எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரையும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

(ஐங்கரன் சிவசாந்தன் - சுண்டுகுளி நிருபர்)

No comments:

Post a Comment