கொழும்பில் நிர்க்கதி நிலையில் இருந்த 18 பேர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவால் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அசாதாரண சூழலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் தொழிலுக்காகவும் இதர தேவைகளுக்காகவும் சென்ற மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஊரடங்கு அறிவித்தல் காரணமாக மிகவும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
தொழில் இன்மையாலும், உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உணவகங்கள் இன்மையாலும் பெரும் அசௌரியங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பில் ஏறாவூரில் இருந்து சென்று கொழும்பில் மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு இவர்களது நலன்தொடர்பில் விளக்கியதோடு, உடனடியாக இவர்களை தங்களது சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான விசேட அனுமதியினை பெற்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள்.
அத்துடன் அம்பாறையை சேர்ந்த இலகு பஸ் உரிமையாளர் ஒருவரை தொடர்புகொண்டு பொலிஸாரின் விசேட அனுமதியுடன் அவர்களை அனுப்பி வைப்பதற்கான அனைத்து விடயங்களையும் பொறுப்பேற்று செவ்வனே நிறைவேற்றி முடித்தார்கள்.
அலி ஸாஹிர் மௌலானா இவ்வாறான மனிதாபிமான செயற்பாட்டிற்கு அவருக்கு நிகர் அவரே தான், அன்றைய தினம் ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் அம்பாறையைச் சேர்ந்த 18 பேர் தங்களது குடும்பங்களுடன் வந்து இணைந்து கொண்டனர்.
தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் இருந்தே இவ்வாறான மனித நேய பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அலி ஸாஹிர் மௌலானாவின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் அந்த சகோதரர்களது துஆக்களுடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment