113 இலங்கையர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது - இந்திய உள்துறை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

113 இலங்கையர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது - இந்திய உள்துறை அமைச்சர்

2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 113 இலங்கையர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

2014 முதல் 2019 வரையான ஆறு ஆண்டுகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18,999 பேருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளதாக அவர் நேற்றைய தினம் ராஜ்ய சபாவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி 15,036 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2,935 பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கும், 914 ஆப்கானைச் சேர்ந்தவர்களுக்கும், மியன்மாரைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு குடியுரிமை கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment