தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி - 08 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி - 08 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 08 பேர் காயமடைந்துள்ளனர். 

லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நோக்கி பயணித்த லொறியானது, அதே திசையில் முன்நோக்கிப் பயணித்த வேனின் பின்புறத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் வேன் சாரதி உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment