சர்வதேச T20 கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தற்போது சுப்பர் ஓவர் விதிமுறைகளை மாற்றப்பட்டதுடன், நேற்று முன்தினம் (12) ஆரம்பமான தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுடனான T20 தொடரில் இந்தப் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய விதிமுறைகள் வருமாறு:
1. போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவர் விளையாடப்படும். சுப்பர் ஓவரும் சமநிலையானால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சுப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.
2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்.
3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு 'ரிவியூ' வாய்ப்பு வழங்கப்படும்.
4. சுப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
5. போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடும்.
6. முதலில் களத்தடுப்பு செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். இரண்டாவதாக களத்தடுப்பு செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கவனத்தில் கொள்ளப்படும்.
7. களத்தடுப்பாளர்களின் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதேபோன்று இருக்கும்.
8. சுப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.
No comments:
Post a Comment