கொரோனாவால் பல வருடங்களுக்கு பின்னர் சீனாவில் ஒத்தி வைக்கப்படவுள்ள முக்கிய அரசியல் கூட்டம்? - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

கொரோனாவால் பல வருடங்களுக்கு பின்னர் சீனாவில் ஒத்தி வைக்கப்படவுள்ள முக்கிய அரசியல் கூட்டம்?

சீனாவில் சுமார் மூவாயிரம் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) வருடாந்த கூட்டத்தை ஒத்தி வைப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சியை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த கூட்டமானது 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சீனாவில் புரட்சிகள் முடிவடைந்ததிலிருந்து ஒத்தி வைக்கப்படவோ அல்லது இடைநிறுத்தப்படவோ இல்லை. 

இக்கூட்டமானது கடுமையான சுவாச நோயானா சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் கடந்த 2003 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இடம்பெற்றது. 

சார்ஸ் வைரஸ் சீனாவில் தோற்றம் பெற்று உலகம் முழுவதும் சுமார் 8000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்ததுடன் 774 பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தது. 

இந்நிலையிலேயே தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த கூட்டமானது எதிர்வரம் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்தது. 

இந்த கூட்டத்திற்கு முன்னர் பெப்ரவரி 24 ஆம் திகதி சுமார் 200 க்கும் குறைவான தேசிய சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று தலைநகரில் கூடி கூட்டம் தொடர்பான அமர்வை ஒத்தி வைப்பது குறித்து மறு ஆய்வு செய்யவுள்ளதாகவும் சீனவின் அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment