ஒட்டுசுட்டான் ஓடு மற்றும் செங்கல் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் தற்பொழுது மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முதல் கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரந்தன் இரசாயன நிறுவனம், காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை போன்ற அரச நிறுவனங்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து மீண்டும் இத் தொழில்துறைகளை ஊக்குவிப்பதற்கு தயாராகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை கைத்தொழில் துறையினர் கொள்ளுப்பிட்டி, காலி வீதி, 73/1 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் தம்மை சந்திக்க முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஓவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமை காலை தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தமது பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றுக்கு துரிதமாக தீர்வைப் பெற்றுக் கொள்ளவதற்கும் தன்னை அமைச்சில் சந்திக்க முடியும் என்று அமைச்சர் விமல் விரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment