2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒரு தடவைகூட பேசாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒரு தடவைகூட பேசாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்!

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒரு தடவை கூட பேசாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதுடன் ஒரு தடவை மாத்திரம் பேசிய 9 பாராளுமன்ற  உறுப்பினர் இருப்பதாக (Manthri.lk) மன்திரி டொட் எல்.கே. இணையத்தளம் மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஹன்ஸாட் தரவு அறிக்கையை அடிப்படையாக் கொண்டே இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில் உரையாற்றாதவர்களென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க பண்டாரநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னகோன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர ஆகியோர் பெயரிடப்பட்டிருக்கின்றர். 

அதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற அமர்வுகளின்போது ஒரு தடவை மாத்திரம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய தேசிய கட்சி தேசிப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், ஐக்கிய தேசிய கட்சி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த, ஐக்கிய தேசிய கட்சி குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசன்த்த பெரேரா மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லாஹொன் ரத்வத்தே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களாகும்.

No comments:

Post a Comment