ஐ போன் உற்பத்தியில் வீழ்ச்சி : சீனாவின் பங்களிப்பும் முக்கியம் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

ஐ போன் உற்பத்தியில் வீழ்ச்சி : சீனாவின் பங்களிப்பும் முக்கியம் !

உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும் ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 

சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் (i phone) உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 

அத்தோடு ஐ போனின் (i phone) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன. 

இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் அதில் பெரிய அளவு வருமானம் வரவில்லையென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

அதேவேளை ஐ போன்களின் உற்பத்திக்கும், வருமானத்திற்கும் சீனாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment