எனக்கும் படையதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடை விதித்தபோது என்ன செய்தார்கள்? - பொன்சேக்கா எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

எனக்கும் படையதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடை விதித்தபோது என்ன செய்தார்கள்? - பொன்சேக்கா எம்.பி.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது தொடர்பில் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், நான் உட்பட 51 படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கண்ணீர் வடித்தார்களா என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா எம்.பி. தெரிவித்தார்.

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிகிறது. ஆனால் ஏற்கனவே படை அதிகாரிகள் 51 பேருக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடை விதித்தது. அது தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. 

இப்போது சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக இருப்பதால் அதை வைத்து அவர்கள் அரசியல் நடத்துகின்றனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிணைமுறி தடயவியல் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கும் திருடர்களை கைது செய்யாமல் இருப்பதற்கும் காரணம் மூன்றில் இரண்டு கிடையாது என்பதையே மக்கள் முன் கூறிவருகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment