'அங்கொட லொக்கா' என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் மிக நெருங்கிய உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினரால் (STF) முல்லேரியாவ, சிரிபெரகும் மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்களிடம் 5 கிராம் 600 மில்லி கிராம் (5.6 கிராம்) ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் முல்லேரியாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரிடம் 2.5 கிராம் ஹெரோயினும் மற்றைய நபரிடம், 3.1 கிராம்ஹெரோயினும் காணப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், 22 மற்றும் 42 வயதுடைய முல்லேரியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரியங்கர மற்றும் பெனியா என்று அழைக்கப்படும் இருவரும் அங்கொட லொக்காவுடன் தொடர்புகளை பேணிவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘அங்கொடெ லொக்கா’ ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை இன்று (02) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment