காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (31.01.2020) இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபையும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இதில் இளம் கலைஞர்களின் கலை நிகழ்வும் சிரேஷ்ட கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்புற இடம்பெற்றன.
இதில் இளம் கலைஞர்களான உனைஸ், ஜலீல் பஹத் எம்.ஜுனைட், அன்வர் ஆகியோர் கொரோனா வைரஸ் நாடகத்தை நடித்ததுடன் சிரேஷ்ட கலைஞர்கள் இளம் கலைஞர்கள் ஒன்றாக பங்கு கொண்ட சுன்னத் கலியாணம் எனும் நாடகமும் இடம்பெற்றது.
கடந்த 40, 50 வருடங்களுக்கு முன்னர் சுன்னத் கலியாணம் எப்படி இடம்பெறும் என்பதை அவர்கள் நடடித்துக் காட்டினார்கள்.
சரண்டிப் முஸ்தபா, கவிஞர் முஸ்தபா, வில்லுப்பாட்டு முஸ்தபா ஸேர், அஸீஸ் மாமா, சாந்திமுகைதீன், வி.பி அஸீஸ் என பல சிரேஷ்ட கலைஞர்கள் இதில் பங்கு கொண்டிருந்தனர்.
இவர்களின் இந்த நாடகம் கடந்த 40, 50 வருடங்களுக்கு முன்னர் சுன்னத் கலியாணம் எப்படி இடம்பெற்றது என்பதை ஞாபகப்படுத்தியது.
கறுத்த அலிவா, கதலி வாழைப்பழம், சர்பத் தண்ணி கொடுக்கப்பட்டு உபசரிப்புக்கள், சுன்னத் மாப்பிள்ளைக்கான வெகுமதிகள் கம்படி, ஸ்பீக்கர் கட்டி பாட்டுக்கள், சுன்னத் மாப்பிள்ளைக்காக முழிப்புக்காட்ட பாவா இவையெல்லாம் இங்கு அரங்கேறின. பாரம்பரியங்கள் பறைசாற்றப்பட்டன.
இதில் சுன்னத் மாப்பிள்ளையாக நடித்தவர் காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர் இளம் கலைஞர் முர்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பார்த்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இவர்கள் நமதூரின் அற்புதமான கலைஞர்கள் இவர்களின் கலைத்திறன் காத்திரமானவை.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
01.02.2020
No comments:
Post a Comment