பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்கள் சபாநாயகரினால் நளை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்கள் சபாநாயகரினால் நளை அறிவிப்பு

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நளை அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான புதிய அங்கத்தவர்களின் பெயர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் பணி சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுக் குழுவிற்கு அங்கத்தவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிவுக் குழு கூடவுள்ளது. தெரிவுக் குழுக்களுக்கான தலைவர்கள் இந்த கூட்டத்தின் பின்னர் நியமிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment