இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தின நிகழ்வை சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு கிளை இன்று கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.எம்.எம். மர்சூக் தலைமையில் வெகுவிமர்சையாக கொண்டாடியது.
இந்நிகழ்வை வாழைச்சேனை நிலைய விசேட அதிரடிப் படையின் உப பரிசோதகர் தென்னகோன் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பி வைத்தார்.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.எம்.எம். மர்சூக் உரையாற்றுகையில் இந்நாட்டில் வாழும் மக்கள் சக வாழ்வையும் சமாதானத்தையம் கடைபிடித்து வாழ வேண்டும் என்றும் எமது நாட்டிலுள்ள மக்கள் எதிர்காலத்தில் மற்ற இனங்களின் மதங்களை விளங்கி அவற்றுக்கு மரியாதையுணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என தனது சுதந்திர தின செய்தியாக தெரிவித்தார்.
இந்நாட்டிற்கு நல்லாட்சி வேண்டி நான்கு இன மதத் தலைவர்களும் பிராத்தனைகளும் இடம்பெற்றது. சுதந்திர தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக பாதைகளில் பயணித்த பொதுமக்களுக்கான தாகசாந்தியும் வழங்கப்பட்டது.
ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக்
No comments:
Post a Comment