இஸ்ரேலிய கைபேசிகளில் ஊடுருவ ஹமாஸ் முயற்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இஸ்ரேலிய கைபேசிகளில் ஊடுருவ ஹமாஸ் முயற்சி

இளம் பெண்களின் கவர்ச்சிப் படங்களை பயன்படுத்தி தமது வீரர்களின் கைபேசிகளில் ஊடுருவும் ஹமாஸ் அமைப்பின் முயற்சியை முறியடித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஒருசில டஜின் வீரர்களின் கைபேசிகள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிடத்தக்க தகவல் மீறலை ஏற்படுத்தவில்லை என்று இராணுவம் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் ஜொனதன் கொன்ரிகஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸினால் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தீம்பொருள் தாக்குதலாக இது இருப்பதாகவும் கொன்ரிகஸ் தெரிவித்துள்ளார். 

காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு தமது இணையத் தாக்குதல் திறனை மேம்படுத்தி இருப்பதை இது காட்டுவதாக கருதப்படுகிறது.

இளம் பெண்களின் புகைப்படத்துடன் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்தி அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறான உத்தியை ஹமாஸ் இதற்கு முன்னர் கையாண்டதில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

“அவர்கள் தமது செயற்பாட்டில் முன்னேற்றத்தை நோக்கி செல்வதை எம்மால் காண முடிகிறது” என்று கொன்ரிகஸ் தெரிவித்தார்.

இந்த ஊடுருவலை பல மாதங்களுக்கு முன் கண்டுபிடித்தபோதும் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பின்னரே முடக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment