”கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தன்னிலையறியாத மழலை” : கண்ணாடியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சோகம் : வைத்தியர் கண்கலங்கும் காட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

”கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தன்னிலையறியாத மழலை” : கண்ணாடியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சோகம் : வைத்தியர் கண்கலங்கும் காட்சி

மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ள கொரோனா வைரஸால் தற்போது சீனாவில் மட்டும் இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறியக் குழந்தையொன்று கண்ணாடி அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை பார்போரை கண்கலங்கச் செய்கிறது. 

குறித்த குழந்தை, அக்கண்ணாடி அறையில் இருந்தவாறு வெளியே இருக்கும் வைத்தியரை பார்த்து கையசைத்து, ஏதோ கூற எத்தணிக்கின்றது. இதனைக் கண்ட அவ்வைத்தியர் கண்கலங்கி நிற்பது பெரிதும் வேதனைக்குரிய நிமிடங்களாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment