கொரோனா வைரஸ் (NCoV2019) காரணமாக சீனாவில் 304 பேரும் பிலிப்பைன்ஸில் ஒருவரும் இறந்துள்ளனர்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இறப்பவர்களின் உடல்களை உடன் தகனம் செய்யும்படி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இறந்தவர்களின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதையோ அடக்கம் செய்தல் அல்லது சடலங்களை இடமாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக இந்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment