சீனாவின் வூஹான் மாநிலத்திலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள், நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்தனர்.
தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் அவர்கள், இன்றையதினம் (04) முகக் கவசங்களை அணிந்தவாறு இலங்கைக் கொடியுடன் சுதந்திரனத்தை அனுஷ்டித்தனர்.
கடந்த சனிக்கிழமை (01) ஶ்ரீ லங்கன் விமான சேவை மூலம் வூஹானிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதோடு, அங்கிருந்து தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment