கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் வென்ஷோவு நகரில் வீட்டுக்கு ஒரு நபர் மட்டுமே வெளியே வர வேண்டும் என்று சீன அதிகாரிகள் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் உள்ளது. சொதியாங் மாகாணம். இங்கு வென்ஷோவு நகரில் கொரோனா வைரஸ் நோய்க்கு 265 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வென்ஷோவு நகரில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு நபர் மட்டுமே 2 நாட்களுக்கு ஒருமுறை வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
90 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில் உள்ள 46 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் முதலில் பரவிய வுகான் நகரம் உள்ள ஹீபே மாகாணத்துக்கு அடுத்தபடியாக செஜியாங் மாகாணத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment