கூட்டமைப்பைச் சிதைத்து, பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது - சித்தார்த்தன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

கூட்டமைப்பைச் சிதைத்து, பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது - சித்தார்த்தன் எம்.பி.

கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். 

வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் 50 ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பெரும்பான்மை பிரதிநிதிகளாக உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டு அரசுகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கட்சி. 

2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011 ஆம் ஆண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்திலே தமிழ் மக்கள் மிகப் பலவீனமாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று பலர் வலிந்து கூறினார்கள். 

அத்தோடு மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாலும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டையினாலும் நாங்கள் அதில் இணைந்து கொண்டோம். 

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்குரிய விடயங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. 

இன்று இந்த கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. 

மக்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று நிச்சயமாக எங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த ஒற்றுமை குழைக்கப்பட்டால் இத்தனை வருடமாகக் கண்ணீர் விட்டோம் இழந்தோம் செந்நீரால் காத்தோம் இப்படியாக வளர்த்து வந்த போராட்ட கதைகள், போராட்ட வரலாறுகளைச் சிதைத்து விட முடியாது. அந்த ஒற்றுமை கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அல்ல அது மக்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமைதான் அந்த ஒற்றுமை. 

அந்த மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாகவே இன்றும் இருக்கிறார்கள் என்றும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் நாங்கள் எங்களது விடுதலைக்கான பாதையிலே போய்க்கொண்டு இருக்கிறோம். அது ஒரு வெற்றி அடைய வேண்டும். அடையும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை அந்த நம்பிக்கையை இழக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment