கொவிட்-19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

கொவிட்-19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள்

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலுள்ள இரு இலங்கையர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனவும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜப்பானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் சந்தன வீரசேன தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 3 ஆம் திகதி முதல் ஜப்பானிய துறைமுக நகரமான யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் பயணித்தவர்களில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 456 ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 513 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கப்பலிலிருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா விமானம் மூலம் வெளியேற்றியிருந்ததைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad