இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் அஸாம் ஓர் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் அஸாம் ஓர் அறிமுகம்

அன்ஸார் சப்ரான்

மீராவோடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அஸாம் தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் மட்/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பூர்த்தி செய்தார். 

கா.பொ.த சாதரண தரத்தில் குறைந்த பெறுபேறுகளை பெற்ற போதிலும் தனது அயராத முயற்சியினால் எமது பிரதேச ஆசிரியர்களிடம் மாத்திரமே உயர் கல்வியை கற்று கா.பொ.த உயர் தரத்தில் 3A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 23வது இடத்தையும் பெற்றார் .

தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவில் BBA கற்கை நெறியை பயின்று கொண்டு வருகின்றார். இந்த வருடந்தோடு தனது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்ய உள்ளார்.

சமூகப் பணிகளில் அக்கறை கொண்ட இவர் அஸ்-ஸபர் ஒன்றியத்தின் ஆரம்ப உறுப்பினராக இன்றுவரை தன்னால் இயன்ற சமூகப் பணிகளை தனியாகவும் அஸ்-ஸபர் ஒன்றியத்தின் ஊடாகவும் மேற்கொண்டு வருகின்றார்.

தனது சமூகப் பணியை எமது பிரதேசத்தில் மாத்திரம் அல்லாமல் தனது பல்கலைக்கழகத்திலும் பல வகைகளில் முன்னெடுத்து வருகின்றார். 

குறிப்பாக தனது junior களுக்கு பிரபல்யம் மிக்க வளவாளர்களை கொண்டு போதை ஒழிப்பு, career guidance, Environmental protection போன்ற கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து பல பாராட்டுக்களை பெற்றுள்ளார். 

அது மாத்திரமல்லாமல் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் (UNDP) நடாத்தப்பட்ட National Youth Social Innovation Challenge 2018 மாநாட்டிலும் பங்கேற்று பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் இளைஞர்களோடு இளைஞராக எமது சமூகத்திற்கும் இளைஞர்களுக்கும் பக்க பலமாக செயற்பட்டு வரும் இவர் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மீராவோடை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கியுள்ளார். எமது சமூகத்தை பொருத்தவரை எல்லோருக்கும் அறிமுகமான, அனைவரிடமும் நற்பெயர் பெற்ற ஒருவரே.

எமது கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி வேட்பாளர் SACM.அஸாம் 2015 ஆண்டு தொடக்கம் பல சமூக சேவையை மேற்கொண்டு வருகின்றார்.

பின்வரும் பல சமுக செயற்திட்டங்களை ஒன்றியங்களினூடாக மேற்கொண்டுள்ளார்.

1.இளைஞர்கள் மத்தியில் போதை தொடர்பான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்கள்.

2.வறிய மாணவர்களின் கல்விக்கு தேவையான கல்வி உபகரணங்களை தனவந்தர்கள் மூலம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்கள்.

3.திடீர் அணர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி உதவிகள் ஏற்பாடு.

4.OL, AL மற்றும் அரச வேலைக்கான போட்டிப் பரீட்சை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள். என பல சேவைகளை முன் மொழிந்து நடாத்தினார்.

No comments:

Post a Comment