ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ள சின்னம் தொடர்பில் நாளை (19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு செயற்குழு நாளை கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை முற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது யானை சின்னத்திலா அல்லது அன்னம் சின்னத்திலா எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவது என்பது குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad