பம்பலபிட்டி டிக்மன் சந்தி வீதி தாழிறங்கியதால் வீதி மூடப்பட்டது - மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

பம்பலபிட்டி டிக்மன் சந்தி வீதி தாழிறங்கியதால் வீதி மூடப்பட்டது - மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

வெள்ளவத்தை டிக்மன் சந்தியிலிருந்து ஹெவலொக் வீதிக்கு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று (02) பிற்பகல் குறித்த வீதி திடீரென தாழிறங்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

டொக்டர் லெஸ்ட ஜேம்ஸ் பீரிஸ் வீதியின் டிக்மன் சந்தி அதாவது டொக்டர் லெஸ்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியிலிருந்து ஹெவலொக் மாவத்தைக்கு செல்லும் வீதியின் ஒரு இடத்தில், வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதால், பாதுகாப்புக் கருதியும், புனரமைப்பு நடவடிக்கைக்காகவும் அப்பாதையை தற்காலிகமாக மூடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே வாகன சாரதிகள் மாற்று வழியாக, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை / டுப்ளிகேஷன் வீதி ஊடாக வரும் வாகனங்கள்

ஹெவலொக் வீதிக்கு செல்ல : இடது புறமாக டி பொன்சேகா பிளேஸ் மூலம் செல்லலாம்.

காலி வீதிக்கு செல்ல : வலது புறமாக டி பொன்சேகா பிளேஸ் மூலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment