ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் இணைத்து கட்சி, மத பேதமின்றி சேவையாற்றி வருகிறார் - ஆளுநர் திஸ்ஸ விதாரன - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் இணைத்து கட்சி, மத பேதமின்றி சேவையாற்றி வருகிறார் - ஆளுநர் திஸ்ஸ விதாரன

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அனைத்து இன மக்களையும் இணைத்து கட்சி பேதம் மத பாகுபாடின்றி சேவையாற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சி தலைவரும், வடமத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

இன்று (02) ஞாயிற்றுக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பி வழங்கப்படவிருந்த வாக்குகளையும் குழப்பி அடித்து பிளவுகளை ஏற்படுத்தி வந்தனர். 

ஆனாலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன மத வேறுபாடின்றி அனைவருக்கும் சமமாக கிராம மட்டத்தில் அனைத்து மக்களுக்கும், ஏழை பணக்காரர் என பாராமல் ஏழை மக்களையும் அரச தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என கூறியே இந்த ஒரு லட்சம் தொழில் வாய்ப்பினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருவதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. 

நாங்கள் எதிர்காலத்தில் எதிர்வரும் தேர்தலின் போது யார் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுகின்றார்கள் அவர்களுக்கு வாக்குறுதி அளித்து இன பாகுபாடின்றி எமது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ வித்தாரண இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment